அமீரகத்தில் பேரா.அ.மார்கஸ் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி…வீடியோ..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இன்று (15/11/2018) மாலை ரிக்கா பகுதியில் கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் பேரா.மாரக்ஸ் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கினார்.  மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பு நிர்வாகிகள், வலசை பைசல் மற்றும் ஈமான் அமைப்பின் பொது செயளாலர் ஹமீது யாசீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேரா.அ. மார்க்ஸ் மனித உரிமை மீறல்கள் பற்றி சிறப்பாக உரையாற்றினார். உரையாடலின் போது அமீரக அரசு நடத்தி வரும் சகிப்புத்தனை உச்சி மாநாட்டை பாராட்டி சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தையும் அதன் ஆணி வேரான மனித உரிமையை பற்றி அவருக்கே உரிய பாணியில் அழகிய முறையில் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக ரஃபீக் சுலைமான் நன்றியுரை வழங்கினார். மேலும்  ஈமான் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பு விருந்தினருக்கு  மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து வருகையாளர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தனி நபர்கள் கலந்துரையாடலின் போது கீழை பதிப்பகத்தின் “காயம்பட்ட காலங்கள்” மற்றும் “ஆன்மீக அரசியல்” புத்தகங்கள் கீழை பதிப்பகம் நிர்வாகி அப்துர் ரஹ்மான் மூலம் பேரா.அ.மார்க்ஸுக்கு வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!