ஐக்கிய அமீரகத்தில் வெள்ளத்தில் பலியான இந்திய கல்லூரி மாணவர்..

ஐக்கிய அரபு அமீரகம் கொர்ஃபகான் மலை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ராசல்கைமா தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த ஆல்பெர்ட் ஜாய் என்ற 19வயது மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று தன் நண்பர்கள் ஐந்து பேருடன் தன் தந்தையின் வண்டியை எடுத்துக் கொண்டு கொர்ஃபகான் பகுதியில் உள்ள நீர் ஓடும் பள்ளதாக்கிற்கு பயணம் சென்றுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக வெள்ளம் வந்துள்ளது. அச்சமயத்தில் அப்பகுதிக்கு வந்த அரேபியர் ஒருவர் தன் வேலையாட்களை வைத்து ஐந்து பேர்களை மீட்டுள்ளார். ஆனால் வண்டியை ஓட்டி வந்த ஆல்பெர்ட் ஜாய் கார் இல்லாமல் வர மறுத்துள்ளார், இந்நிலையில் மீண்டும் திடீரென வந்த வெள்ளம் காருடன் மாணவனை அடித்துச் சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து துபாய் காவல்துறை உதவியுடன் மோப்ப நாய்கள் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இன்று (ஞாயிறு -19/11/2017) வரை எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!