சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 97.02% ஆகும். இது மாநில அளவிலான தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை அருகே பழமலை நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 500 -க்கு 414 மற்றும் 500 -க்கு 412 மார்க் மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இதில், நரிக்குறவரின மாணவர் தனுஷ் என்பவர் 500-க்கு 412 மதிப்பெண் பெற்றார்.
விளைவாக தமிழ்- 92, ஆங்கிலம்- 72, கணக்கு-70, அறிவியல்-83, சமூக அறிவியல்- 95 என 500 -க்கு 412 மதிப்பெண் எடுத்து மாணவர் தனுஷ் சாதனை படைத்துள்ளார். தனுஷ் வறுமையின் காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார் ஆசிரியர்களுடைய முழு முயற்சியினால் மீண்டும் அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதே போல, மற்றொரு நரிக்குறவரின மாணவர் துரைப்பாண்டி என்பவர் 500 -க்கு 414 மதிப்பெண் பெற்றார். இவர், பாட வாரியாக, தமிழ்-91, ஆங்கிலம்-65, கணிதம்-79, அறிவியல் -80, சமூக அறிவியல்-99 என 500 -க்கு 414 மதிப்பெண் எடுத்துள்ளார்.இருவருக்கும் உறவினர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் பொன்னாடை போர்த்தி இனிப்புகளை ஊட்டி வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்

You must be logged in to post a comment.