இராமநாதபுரம் வசந்த் நகரில் ரேசன் அரிசி கடத்துவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது டாடா நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் 18 மூட்டை கொண்ட 630 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்டது. மேலும் குமாரவேல் , குகன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவல் பெற்று இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதில் இராமநாதபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரசாமி மற்றும் தலைமை காவலர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

You must be logged in to post a comment.