கீழக்கரையில் 10 லட்சம் மேல் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் இருவர் விசாரனை !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன் என்ற இரட்டையர் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி தங்களை சமூக சேவகர் என காட்டிக்கொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவர்கள் இருவர் மீதும் கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் அதற்கான பிடிவாரன் வழங்குவதற்காக கீழக்கரை சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி இரட்டையர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 10 லட்சத்திற்கு மேல் மதிப்பிலான 500 கிலோக்கு மேல் கடல் அட்டை மூட்டை மூட்டையாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போன சார்பு ஆய்வாளர் உடனடியாக இது குறித்து கீழக்கரை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டின் பின்புறமாக கடல் அட்டையை மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்திற்கு மேல் மதிப்பிலான சுமார் 500 கிலோக்கு மேல் கடல் அட்டையை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!