ஆரணி அருகே கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பராமரிப்பு கட்டணமாக ரூபாய்1135 வசூலிக்கபடுகின்றது. அரசு கொடுக்கும் நிதி போதிய அளவில் இல்லை என்பதால் மாணவர்களிடம் வசூலிப்பதாக தலைமையாசிரியை மற்றும் அதிமுகவை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் ஓப்புதலால் பரபரப்பு .மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
.
இந்த பள்ளியில் 900 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியையாக சரோஜினி என்பவரும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக கண்ணமங்கலம் பகுதி அதிமுகவை சேர்;நத கே.டி.குமார் என்பவரும் மற்றும் 30 ஆசிரியர்கள் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் இந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை மற்றும் 11ம் வகுப்பு |ஆகிய ஆங்கில வழி கல்வி சேர்க்கைக்கு தலா ரூபாய் 1135 /- வீதம் மாணவிகளிடம் கட்டாய வசூல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வசூல் பணத்தில் பள்ளிக்கு தேவையான மும்முனை மின்சாரம், பீரோ வினாத்தாள் கட்டணம் பள்ளி சம்மந்மான பயண செலவு உள்ளிட்வைகளுக்கு அரசு கொடுக்கும் நிதி போதியளவில் இல்லை என்பதால் மாணவிகளிடம் ரூ1135/- வசூலிக்கப் படுவதாகவும் எந்த மாணவிகளிடமும் கட்டாயபடுத்த வில்லை பள்ளி பராமரிப்புக்காக கூடுதல்கட்டணம் பெறுவதாக பள்ளி தலைமையாசிரியை சரோஜினி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார் ஆகியோர் கூறினார்கள்.
அரசு கொடுக்கும் நிதி போதியளவில் இல்லை என்பதால் மாணவிகளிடம் வசூலிப்பதாக தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஒப்புக்கொள்வதால் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









