ஆரணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னச்சரிக்கை நடவடிக்கை.தமிழக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் திடீர்ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் நந்தினி உட்பட 15மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஆரணி மற்றும் சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள நோயாளிகள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாவட்ட அளவில் ஆரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவது அதிகமாக உள்ளதாகமருத்துவவட்டாரத்தில் தெரிவிக்கபட்டது.இந்நிலையில் திடீரென ஆரணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னொச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் விஸ்வநாதன் நேரில் வந்து தீடீர் ஆய்வு செய்தார்.

பின்னர் நோயாளிகளிடம் மருத்துவ வசதி, படுக்கைவசதி சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினி உள்ளிட்டோர் இருந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை டெங்கு பாதிப்பு ஓல்லை எனவும் ஆரணியில் காய்ச்சலால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைககள் குறித்து ஆய்வு செய்ததாக மருத்துவ பணிகள் இணைஇயக்குநர் விசுவநாதன் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!