சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராம இந்தியன்வங்கி கிளை ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமரா மீது கருமையான திரவத்தை தெளித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. போதிய பணம் இருப்பு இல்லாததால் பணம் தப்பியது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் இந்தியன்வங்கி ஏடிஎம் மற்றும் பின்பகுதியில் இந்தியன்வங்கி கிளையும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரவு மர்மநபர்கள் ஏடிஎம் இயந்திரம் உள்ள அறையின் உள்ளே புகுந்து சிசிடிவி கேமரா மீது வீடியோ பதிவாகாமல் இருக்க கருமையான நிறம் கொண்ட திரவத்தை தெளித்துவிட்டு நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் மர்மநபர் ஈடுபட்டுள்ளார்.ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏடிஎம்மில் போதிய அளவில் பணம் இருப்பு இல்லாமல் காலியாக இருந்ததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மூர்த்தி.திருவண்ணாமலை மாவட்டம்


You must be logged in to post a comment.