சென்னையில் நடைபெற்ற தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா மாநில தலைமை நிர்வாகி பங்கேற்பு

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பங்குபெற அந்தந்த மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி சேலம் மாவட்டம், டிசம்பர் 2ம் தேதி மதுரை மாவட்டம், டிசம்பர் 3 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்றது, டிசம்பர் நாலாம் தேதி வடசென்னை , டிசம்பர் 5ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம்,மற்றும் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மகாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் நல மன்ற சார்பில் மாநில தலைவர் தளபதி எஸ்கே ஆதிமூலம் அனைத்து நிகழ்ச்சிகளும் பங்கு பெற்று ஆலோசனை வழங்கினார்.இதைத்தொடர்ந்து ஞாயிறு அன்று நடைபெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநில தலைவர் தளபதி எஸ் கே ஆதிமூலம், மாநில இளைஞரணி நிர்வாகி தனவேல், விஜய் ராஜேஷ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் ரவி உட்பட நிர்வாகிகள் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!