திருவண்ணாமலை மாவட்டம் போளுர் டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் துரைமுருகன் – பூவரசி தம்பதியினர். துரைமுருகனின் நண்பர் வழக்கறிஞர் தமிழன்பு ஆவார். இவர்கள் கர்ப்பினியாக. உள்ள பூவரசியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த மகப்பேறு மருத்துவர் பாரதியை அணுகி சிகிச்சை மற்றும் ஆலோசனை கேட்டபோது சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் மாறாக தனியார் மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் வேண்டுமென்றால் தன்னுடைய கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் துரைமுருகன் மருத்துவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இதனால் அந்த அறையை விட்டு மருத்துவர் பாரதி வெளியே சென்றுள்ளார். அப்போது வெளியே சிகிச்சைக்காக காத்துகிடக்கும் 15- க்கும் மேற்ப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்காமல் ஏன் செல்கிறீர்கள் என துரைமுருகன் மருத்துவர் பாரதியை கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த மற்றொரு அரசு மருத்துவர் தியாகேஸ்வரன் உங்கள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் துரைமுருகன் உடன்வந்த அவருடைய நண்பர் வழக்கறிஞர் தமிழன்புக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில்பேசி ஒருவருக்கொருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகமாறி ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









