கருணை அடிப்படையில் வேலை..

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த வி.ஜெயசந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஜெயசந்திரனின் குடும்ப சூழ்நிலை கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இதையடுத்து மருத்துவ குழுவினர் ஜெயசந்திரனுக்கு மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் உடல் தகுதியின்மை சான்று அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஜெயசந்திரனின் மகன் ஜெ.சுதேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் சித்தாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணி நியமனம் செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.அப்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!