திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவநாயக்கன்பேட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை பல நூற்றாண்டுகளாக செங்கம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த பழமைவாய்ந்த குளம் தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இக்குளத்தை செங்கத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த நன்னன் என்ற சிற்றரசன் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்குளத்திற்கு குடிநீர் குளம் என்ற பெயரும் இருந்ததாகவும், மிக பெரிய பிரமாண்டமான அளவில் இக்குளம் இருந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இக்குளத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்துவந்தது. தற்போது இக்குளத்தை சுற்றிலும் விடுகள் கட்டப்பட்டு இக்குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள விடுகளிருந்து வெளியேரும் கழிவுநீர் இக்குளத்தில் கலந்து தூர்நற்றம் வீசுகிறது. மேலும் இக்குளத்தை சுற்றிலும் மரங்களும், புதர்கள் மன்டிக்கிடக்கிறது. இதேநிலை நீடித்தால் இக்குளம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என சமூக ஆர்வலர்கள் இப்பகுதி மக்கள் கவலை கொள்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்ககூடும் என கூறுவதுடன், இதை அரசு கண்டுக்கொள்ளவிட்டால் இதுபோலவே நீர் நிலைகள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கப்பட்டு நீராதரம் அழியும் நிலை தொடரும் எனவும் எச்சரிக்கின்றனர்.
இதுவரையில் இந்த குளத்தை மீட்டெடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுன்வர வில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை முழுவதுமாக அகற்றி இக்குளத்தை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்கின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









