திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தேனீ மலை பகுதி மக்கள் பயன்படுத்திவந்த சுடுகாடு மீட்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் திருவண்ணாமலை நகரம் தேனி மலைப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர் இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுடுகாடு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் சிலர் காவல்துறை பாதுகாப்புடன் வேலி அமைப்பதை கண்டித்து தேனி மலைப் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த திருவண்ணாமலை நகர போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்


You must be logged in to post a comment.