தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன் தலைமையில் வருகை தந்த தொண்டர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கும், வடக்கு வீதியில் உள்ள எம்ஜிஆர் திருவருவு சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மாநகரத் தலைவர் சாய் ஆனந்த், இளைஞரணி தலைவர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி,மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்,மாவட்ட மகளிர் அணி மேகராஜ் பேகம், மாநகர மகளிர் அணி புனிதா, கிழக்கு ஒன்றிய மகளிரணி சாந்தி, மற்றும் தமிழக வெற்றி கழகத்தில் பெரும் திரளான தொண்டர்கள் பேரணியாக வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தி.ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.
You must be logged in to post a comment.