நிலக்கோட்டை பகுதியில் திமுக குறித்து தவெக ஒட்டிய பரபரப்பு போஸ்டர்! 2 பேர் மீது வழக்கு பதிவு, ஒருவர் கைது..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், வத்தலகுண்டு, கொடைரோடு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பாக விஜயின் புகைப்படத்தோடு திமுக குறித்து திருடர்கள் முன்னேற்ற கழகத்தை அரசியலில் இருந்து அகற்ற வந்த அண்ணா என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு
இந்த போஸ்டர் குறித்து வத்தலகுண்டு காவல் நிலையம், நிலக்கோட்டை காவல் நிலையம், அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் ஆகிய 3 காவல் நிலையங்களில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அம்மைநாயக்கனூர், பள்ளபட்டி சேர்ந்த நல்லுதேவர் மகன் ஜெயச்சந்திரன்(45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ராமர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.