வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்; தவெக தலைவர் விஜய்..

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில்,

‘ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!