தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் கோஷ்டி பூசல் உச்சகட்டம்..

ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவராக மலர்விழி ஜெயபாலா உள்ளார். தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய் உத்தரவு படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகள் கழக வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு கோஷ்டியினர் கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் டிச.16 ல் தமிழக வெற்றிக் கழக  ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜா, ஆலோசகர் முருகேசன் உள்ளிட்டோர் விலையில்லா விருந்தகம் தொடங்கி பொதுமக்களுக்கு உணவு பொட்டலம், குடிநீர் பாட்டில் வழங்கினர். இது பற்றி அறிந்த மாவட்ட தலைவர் கயல் விழி ஜெயபாலா தன்னிடம் தகவல் தெரிவிக்காமல், தனித்து செயல்பட்ட அமைப்பு செயலாளர் ராஜாவை கழகத்தில் இருந்து நேற்று (டிச. 17) நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மனமுடைந்த அமைப்பு செயலாளர் ராஜா, ஆலோசகர் முருகேசன் உள்ளிட்டோர் கூறுகையில்,  கடந்த மாதம் நடந்த தவெக மாநாட்டிற்கு  லட்சக்கணக்கான தொகையை மாவட்ட தலைவர் கயல்விழி ஜெயபாலாவிடம் கொடுத்தோம். எங்கள் ஏற்பாடுகளில் நடந்த விலையில்லா விருந்து உள்ளிட்ட உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் கயல்விழி ஜெயபாலா ஏற்பாட்டில் நடந்ததாக தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.

இதனால் ஆவேசமடைந்த கயல்விழி ஜெயபாலா எங்கள் இருவரையும் கழகத்தில் இருந்து தன்னிச்சையாக நீக்கி உள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் தலைவர் விஜய், தவெக வளர்ச்சிக்கு விஸ்வாசமாக மக்கள் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்து வருகிறோம். கயல்விழி ஜெயபாலாவின் எதேச்சதிகார செயல்பாடுகள் குறித்து கழகத்தின் தலைமைக்கு எழுத்து பூர்வ தன்னிலை விளக்க கடிதம் அனுப்பி உள்ளோம். இந்த விவகாரத்தில் த வெக தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்றனர் எங்களை போன்றோர் தவெக வளர்ச்சிக்கு நலத் உதவிகளை இயன்றளவு செய்து வருகிறோம். எங்களின் நற்செயல்களுக்கு மாவட்டத் தலைவர் கயல்விழி ஜெயபாலா தொடர்ந்து இடையூறாக உள்ளார் . இவரது முட்டுக்கட்டையால் தவெக வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் எவ்வித பிரதிபலன் எதிர்பாராமல் கழக வளர்ச்சி பாடுபடும் எங்களைப் போன்றோரை தலைமை அரவணைத்து வழி நடத்தினால் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டமின்றி தமிழக வெற்றிக்கழகம் இளையோர் எழுச்சி வளர்ச்சி அடையும் என்றனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!