சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவைகள்;மத்திய அரசு அறிவிப்பு..
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தற்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே 12 சேவையாகவும், சென்னை – திருச்சி இடையே 22 சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதி முதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.