இராமநாதபுரம் : அமிர்தா குழுமமானது கல்வி மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மாதா அமிர்தானந்தமயி ஆசியுடன் இராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் உயர் நோக்கில் இராமநாதபுரம்) அருகே ஆர்.எஸ். மடை, எம்.கே.நகர், இராமேஸ்வரம் , ஜெ.ஜெ.நகர் ஆகிய இடங்களில் அமிர்தா ரைட் இலவச டியூஷன் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையங்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. பெற்றோரின் வேண்டுதலுக்கு இணங்க வழுதூர், வேதாளை ஆகிய இடங்களிலும் இலவச டியூஷன் சென்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மாணவர்களின் கல்வியறிவு, ஆளுமை திறன், விளையாட்டு, கையடக்க கணிணி கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு திறன்களை ஒருங்கே பெற்று சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கு வழிவகை செய்கிறது. மாணவர்களின் வாசிப்பு திறனை நன்கு ஊக்குவிக்கும் விதமாக நூலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம், ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயம் மேலாளர் பிரம்மசாரினி லட்சுமி தெரிவித்தார்
You must be logged in to post a comment.