தூத்துக்குடி சுரபி அறக்கட்டளையின் மாலை நேர வகுப்பு மாணவ மாணவியர் அசத்தல்.!
ஷோபுகாய் கோஜூரியூ கராத்தே பள்ளி இந்தியாவின்
சார்பாக 2019 க்கான, மூன்றாம் அனைத்திந்திய கோஜு கோப்பை கராத்தே போட்டிகள் கொடைக்கானலில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கு பெற அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தூத்துக்குடி முத்தையா புரத்தில் அமைந்துள்ள சுரபி அறக்கட்டளையின் மாலை நேர வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் பங்கேற்று மூன்று பதக்கங்களை தட்டிச் சென்றனர். பெண்களுக்கான கட்டா பிரிவில் போட்டியிட்டு,எஸ். கிஷானா சபரீஸ்வரி வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தையும், டி. நந்தினி வெண்கலபதக்கம் பெற்று மூன்றாம் இடத்தையும், இதே போல் ஆண்களுக்கான கட்டா பிரிவில் எம்.கேசவ் வெண்கலப் பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று, தூத்துக்குடி மாவட்டத்திற்கும், சுரபி அறக்கட்டளைக்கும் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுரபி அறகட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஹேமாமுரளிதரன் (கவிதாயினி.செந்தாமரைக்கொடி) தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார், தூத்தக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா, மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாணவர் மாணவியரை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









