தூத்துக்குடியில் ஜாக்டோ – ஜியோ மறியல் போராட்டம் : ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கைது :கைதுக்கு பயந்து பலர் எஸ்கேப்..

தூத்துக்குடியில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், கைதுக்கு பயந்து பலர் எஸ்கேப் ஆகினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ள முக்கிய சாலையில் இரண்டு மணி நேரத்திற்க்கும் மேல் நடந்த சாலை மறியலால், பொதுமக்கள், நோயாளிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மூன்றாவது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1000த்திற்க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!