காவலர் நிறைவாழ்வு பட்டறைக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு பெங்களுரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்”மருத்துவமனை தமிழகம் முழுவதும் பயிற்சியில் பங்குபெற்ற பயிற்சியாளர்களுக்கு நடத்திய போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.
தமிழக அரசு காவல்துறையினரின் மன உளைச்சலை போக்குவதற்காக காவல்துறையினர் அனைவருக்கும் “காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி பட்டறை” ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சிவில் துறையில் திறமை வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களுரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்” (NIMHANS-National Instituteof Mental Health and Neuro Sciences) நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. இவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை( stress magargement) குறித்து. அதாவது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையான மன அழுத்தம் இருக்கும், அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, பணியை முழு மனதுடன் திருப்தியாக செய்வது குறித்தும், வாழ்க்கையில் குடும்பத்தோடு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் 5 நாடகள் 17.12.2018 முதல் 21.12.2018 வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பயிற்சியில் கலந்து கொண்ட பயி;ற்சியாளர்களுக்கு ‘நிம்ஹான்ஸ்;’ நிறுவனம் போட்டி நடத்தியது, அதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பயிற்சிக்கு அனுப்பப்பட்ட மாசார்பட்டி காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி, கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மீஹா மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை பூங்கொடி ஆகியோர் கொண்ட இக்குழு தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற இக்குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் உடனிருந்தார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









