ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான போராளிகளுக்கு தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது..

இன்று காலை 10மணிக்கு திருச்செந்தூர் அமலிநகரில் வைத்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான போராளிகளுக்கு தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதன் மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஜோசப், மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்டர்லி, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்த், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல், தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட செயளாளர் எடிட், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரெமி ஆகிய தோழர்கள் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

இதில் விசிக சார்பில் இசிஎபா மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் இராவணனுடன் நானும் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளிகளின் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினோம்.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட தொடர்ந்து போராடுவோம்.

இவண்

சு.விடுதலைச்செழியன் மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா விசிக, தூத்துக்குடி தெற்கு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!