பரமக்குடியில் மக்கள் சந்திப்பு டிடிவி தினகரன் பிரசாரம் ..வீடியோ..

தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலர அமமுக., வுக்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் உருக்கமான பேசினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பரமக்குடியில் டிடிவி பேசினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அமமுக., துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகர மக்கள் சந்திப்பு இரண்டு நாட்கள் பயணத்தை தொடங்கினார. பார்த்திபனூர் கீழப்பெருங்கரையில் இருந்து தொடங்கிய பயணம் கமுதக்குடி, பொன்னையாபுரத்தில் மக்கள் உற்சாக வரவேற்றனர்.

அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது: நம்மிடம் பலர் பிரிவினையை உருவாக்க பார்க்கின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கவும் , தென் மாவட்டங்கள் என்றென்றும் சிறப்பு பெற்று விளங்கவும்  ஒரணியில் திகழ வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா பெயரை சொல்லிக் கொண்டு ஏமாற்றும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை.

அ.ம.மு.க திருவாரூர் தேர்தலை நோக்கி சென்ற போது , தேர்தலை சந்திக்க பயந்து கொண்டு ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி உச்ச நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்தனர். அமமுக., தேர்தலில் வெற்றி பெற்றால் தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை அரசு விழாவாக அறிவிக்கப்படும். மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தின் போது டாக்டர்.முத்தையா, மாவட்ட செயலாளர் ஆனந்த், பரமக்குடி நகர் கழக செயலாளர் சுப்ரமணியன், நகராட்சி முன்னாள் உறுப்பினர் தனிக்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!