டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..

இன்று காலை (29/07/2018) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அவருடைய கார் படு சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டு வீச்சில் கார் ஓட்டுநர் மற்றும் கேமரா மேன் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வீச்சில் அமுமுக கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட புல்லட் பரிமளா எனும் முன்னாள் உறுப்பினரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இச்சம்பவத்தை ஒட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்’”  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை டிடிவி தினகரன் #அமமுக வை விட்டு நீக்கியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்த தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுனர் சுப்பையாவை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்” என  துணை ஆணையர் செஷாங் சாய் விளக்கம் அளித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!