நியாய விலைக்கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப கார்டுதாரர்களுக்கு 100% குடிமைப் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்..பணியாளர் விரோத போக்கை கை விட வேண்டும். .கொரானா தொற்று காலத்தில் எங்களுக்கு 500000 ஐம்பது இலட்ச நிவாரண திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும்.சாலை விபத்தில் மரணம் அடைந்த பணியாளர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும்..பாக்கெட்ட் முறையில் பொருட்கள் வழங்க வேண்டும்..ஒரு துறையின் கீழ் ஆய்வு வேண்டும். .மகளிர் விற்பனையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

குறிப்பாக, பொதுமக்களுக்கு வழங்க கூடிய ரேஷன் பொருட்கள் 100% வழங்க வேண்டும். அப்பொழுதுதான் பொதுமக்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை இருக்காது எனும் மிக முக்கியமான கோரிக்கையோடு, மேலும்,சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு முககவசம், சமூக இடைவெளி விட்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!