தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 18-வார்டு களையும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்நகரில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பலசரக்கு கடைகள், பூக்கடைகள், அரிசி கடைகள், பேக்கரி கடைகள், டீக்கடைகள், பாத்திரக் கடைகள், பர்னிச்சர் கடைகள், உணவகங்கள் மட்டுமின்றி வங்கிகள் மார்க்கெட்டுகள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள், பேருந்து நிலையம் காவல் நிலையம் அரசு அலுவலகங்கள் பெட்ரோல் நிலையம் கூட்டுறவு வங்கிகள் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் திருட்டு சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளை கண்டறிவதற்காக ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நகர்நல கமிட்டியாளர்களிடம்கேமராக்களை பொருத்தி காவல்துறையினருக்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நகர் நல கமிட்டியார்கள், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை வரையிலும், எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து நான்கு வழிச்சாலை வரையிலும், வி.கே.எஸ். பேக்கரியிலிருந்து வேலப்பர் கோயில் செல்லும் சாலையில் ஆரோக்கி அகம் வரையிலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஏத்த கோவில் செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி வரையிலும், தேவர் சிலையிலி ருந்து மீனாட்சி அம்மன் கோவில் வரையில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் 5 எம்பி கொண்ட 65 நவீன கேமராக்கள் பொருத்து வதற்காக கேமராக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் எங்கெங்கு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற இடத்தினை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நகர் நல கமிட்டியார்கள் சார்பில் பாண்டியராஜன் ரமேஷ் மற்றும் கேமராக்கள் பொருத்துபவர்கள் கலந்து கொண்டனர். தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ விஜயராஜ் உடனிருந்தார்
சாதிக்பாட்சா நிருபர் தேனி

You must be logged in to post a comment.