தென்காசி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடல் மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்ததாவது, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. அதே போல் இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் 8,353 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்து அட்டை (Greetings Card) உறுப்பினர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.