பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை வரும் 17-ம் தேதி விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ அறிவிப்பு.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் சிஎம்எஸ் 01 செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. கால நிலைக்கு தகுந்தபடி வரும் 17ம் தேதி பிற்பகல் 3:41 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.தகவல் தொடர்புக்காக இந்தியா விண்ணில் செலுத்த உள்ள 42வது செயற்கைக்கோளான சிஎம்எஸ் 01 மூலம் இந்தியாவின் முக்கிய இடங்கள், அந்தமான்நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளுக்கு தொலைதொடர்பு சேவை அளிக்க முடியும். பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 77 ராக்கெட்டாகும்.

Source By: Tamil.news18 Thanks : Viswamohan ISRO, Shriharikotta. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!