தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் சிறந்த கல்விச் சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு “டிரஸ்ட்-இந்தியா” எனும் பள்ளியை நிறுவினார். கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளியின் முதல்வராக சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இப்பள்ளி நிறுவனர் பூ.திருமாறன்.



கல்வி, இரத்த தானம், சமையல், சிலம்பக் கலை, குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் என புகழ் பெற்ற கிராமத்தில் “டிரஸ்ட்-இந்தியா” பள்ளி இயங்கி வருகிறது. அமைதியான மற்றும் பாதுகாப்புடன் பசுமை சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியில் பெற்றோரை வருத்தும் கட்டணம் கிடையாது. அனுபவமிக்க பெண் ஆசிரியைகள் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து, மலேசியா, ஹாலந்து போலந்து, போன்ற சர்வதேச நாடுகளில் உள்ள தலை சிறந்த கல்வியாளர்கள் பலர் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்று வித்து வருகின்றனர்.
இங்கு பயிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச, எழுத வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும், குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் வட இந்திய குழந்தைகளை தினமும் வாகனத்தில் அழைத்து வந்து, உணவு, உடை கல்வி உபகரணங்கள் வழங்கி பின்னர் கல்வி கற்பிப்பது இந்த பள்ளியின் தனிச் சிறப்பு. “டிரஸ்ட்-இந்தியா” பள்ளி தனித்துவமிக்க கல்வி சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்