இராமநாதபுரம் மாவட்டம் முகவையார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம் மாவட்டம்  முகவையார் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடம் அர்பணிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழா பஞ்சந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள அறக்கட்டளை வளாகத்தில் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  இதில் அறக்கட்டளை சேவகர்களால் 11 சென்ட் நிலம் அறக்கட்டளையின் பொது பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வெளிநாடுவாழ் சேவகர்கள் உதவியோடு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ, துபாயில் இறந்த மொட்டையன்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் குடும்பத்திற்கும், மாணவி கற்பகவள்ளி மற்றும் கீழமுந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற முதியோருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது, விழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசுபள்ளி உளவியல் ஆய்வாளர் கருப்பையா, மதுரை அலைகள் அறக்கட்டளை தலைவர் ஜெகன், சமூக ஆர்வலர் இராமநாதபுரம் சாகுல் ஹமீது, சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன், இராமேஸ்வரம் தாலுக்கா முத்தரையர் இளைஞர் சங்க தலைவர் மணிகண்டன், சிவசேனா கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சபேஷ்பாபு, கீழமுந்தல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் முத்துமுணியே ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்,

விழாவை அறக்கட்டளையின் நிறுவனர் முகவை சேகர் ஆலோசனைப்படி மாநிலச் செயலாளர் திருப்பூர் சங்கர் மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன் மாவட்ட பொருளாளர் காசிநாதன், மற்றும் சுரேஷ் , பரமசிவம் மற்றும் அறக்கட்டளையின் சேவகர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!