மதுரையில் 25-03-2018 அன்று நம்பிக்கை அறக்கட்டளை என்ற பெயரில் குடிமகன்களை நன்மக்களாக மாற்றும் நோக்கில் ஆரம்பம் செய்யப்பட்டது, அதன் துவக்க விழா மதுரை ராஜதானி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் ரூபி வழங்கினார், அவரைத் தொடர்ந்து தலைமையுரையை அப்போலோ மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரையை பல முக்கியஸ்தர்களும், சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டவர்களும் வழங்கினார்கள். பின்னர் அதை தொடர்ந்து சிறப்புரையைஞ எவிடன்ஸ் இயக்கம் கதிர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் திருமாவளவன் குத்துவிளக்கை ஏற்றி வைத்து துவங்கி வைத்து நம்பிக்கையூட்டும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக திரைப்பட நடிகரும், இயக்குனருமான அமீர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












