டிரஸ்ட் மூதாளர் பேணலகத்தில் இருபெரும்விழா

வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் மற்றும் மூதாளர் இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டவர் பங்கேற்று விருதுகள் வழங்கினர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம் பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஜி.பி சார்பில் 190-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பணிகளில் உள்ளவர்கள் பலர் கெளரவிக்கப் பட்டனர். டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இருபெரும் விழாவில், சமூகத்தில் குழந்தைகள் நலனுக்காக உழைப்பவர்களுக்கு இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகளை இத்தாலி நாட்டவர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஏகலைவன் முன்னிலை வகித்தார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் வரவேற்றார். 190 வது திருவள்ளுவர் சிலையை வி.ஜி.பி அதிபர் வி.ஜி சந்தோஷம் திறந்து வைத்து பேசினார். மணிமுத்தாறு காவல் துறை ஒன்பதாவது பட்டாலியன் கமாண்டண்ட் கார்த்திகேயன் கல்வெட்டினை திறந்து வைத்தார். இத்தாலி நாட்டு மார்க்கோ கேப்ரா, மாரா இன்னோசன்ஸி, கயினோ பனோன், மனுவேலா ரூசோ, அலெஸாண்ட்ரா குக்லைல்மினி, கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர் உயர்வுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விருது பத்திரங்களை வழங்கினர்.

 

சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேராசிரியர் பால் மகேஷ், நாகராஜன், ரோட்டரி கணேசமூர்த்தி, இசக்கியப்பன், அமலி பள்ளி அருள் மேரி, மரிய இனிகோ, நெல்லை விநாயகம், பசுமை ஜவகர், பெத்த நாடார்பட்டி வைத்திலிங்கம், விகேபுரம் அருட் சகோதரர் அந்தோணி சாமி, பீமு ஆசிரியை, அம்பை மரகத சுப்பிரமணியன், ஆசிரியர் பெத்த நாடார்பட்டி எழுத்தாளர் விஜயராணி, ஆய்க்குடி தலைமை ஆசிரியை பார்வதி, கவுன்சிலர் ஐசக் தேவநேசன், “யோகா” ப்ரிஷா, வள்ளியூர் ஆண்டாள் என 50க்கும் மேற்பட்ட சிறப்பானவர்களை டிரஸ்ட் பேணலகம் கௌரவித்தது. தென்காசி மாவட்ட குழந்தை நல குழு தலைவி விஜய ராணி, காரல் மார்க்ஸ், தங்கம், இஸ்மாயில் கனி, சுரேஷ் மற்றும் தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் இந்தோ-இத்தாலி சிறப்பு விருது பெற்றனர். பெனிவிட்டி பரமேஸ்வரன், உதயகுமார், நித்யா மற்றும் சென்னை ஆர். ராஜ் பிரதீப் ஆகியோரின் குழந்தை நல சேவைகளை அனைவரும் பாராட்டினர்.

 

இந்த விழாவில் முதியோர்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சாந்தி திருமாறன், நன்னன் மற்றும் பீட்டர் செய்திருந்தனர். வெளி நாட்டவருக்கு பாரம்பரிய விருந்து வெங்காடம்பட்டி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!