கீழக்கரை வடக்குத் தெருவைச் சர்ந்தவர்கள் கொந்த கருணையப்பா பள்ளியை நோக்கியிருந்த ட்ரக் கொட்டகையை மறந்து இருக்க மாட்டார்கள். கீழக்கரைக்கு ஏர்வாடி ரோடு வழியாக நுழைபவர்கள் இந்த ட்ரக் கொட்டகையை கடந்துதான் சென்று இருப்பார்கள். இந்த ட்ரக் கொட்டகை பல வருடங்களாக பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் தனியாரால் பராமரிக்கபட்டு வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அச்சொத்து அரசாங்கத்துக்கு உட்பட்டது என்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
பல கோரிக்கைகளுக்கு பின்னர் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு தொந்தரவாக இருந்த இடிமான பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு திறந்த வெளியாக இருந்தது. அத்திறந்த வெளி மக்கள் பொது பயன் பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் வழி செய்து தரும் என்று நம்பிக்கையுடன் இருந்த அத்தெரு மக்களுக்கு எந்த ஒரு விடிவு காலமும் பிறக்கவில்லை. சில வருடங்கள் பிறகு கடந்த பின்பு தனியாருக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட சட்ட போரில் அரசாங்க தரப்பு வென்றதாக கூறி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. கம்பி வேலிகள் அமைத்த பின்பு நகராட்சியால் இந்த இடம் தெருவுக்கு நடுவில் ஒரு குப்பைக் கிடங்காகவே மாற்றப்பட்ட வருகிறுது.
அதற்கு அடித்தளம் அமைத்தது போல் குப்பைகள் கொட்டி வைக்கப்படும் சுத்தம் செய்யப்படாத குப்பை டிரம்கள் அங்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது சுற்றபுறத்தைப் பற்றி கவலைப்படாத மக்களால் கழிவுகள் கொட்டப்படும் குப்பையும் , சுற்றி ஓடும் சாக்கடையும் நோய்களின் கூடாரமாக இடமாக மாறி வருகிறது. சமீப காலமாக இத்தெருவில் டெங்கு மலேரியா மற்றும் கிருமி காய்ச்சல் அதிகமாக பரவி வருவது குறிப்பிடதக்கது. இந்த சமூக அவலத்தை கீழக்கரை மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கும் மக்கள் களம், பாதுகாப்பு கழகம் மற்றும் சட்டப் போராளிகள் கையில் எடுத்து அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்களா?? மக்கள் நோய் நொடியில் இருந்து காப்பாற்றபடுவார்களா?? ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் வடக்குத் தெரு மக்கள்..



2 thoughts on “டெங்கு கொட்டகையாக மாறி வரும் வடக்குத் தெரு ட்ரக் கொட்டகை…”
Comments are closed.