இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 67-வது புதிய கிளை திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் திறக்கப்பட்டது
இந்த புதிய கிளையைதிருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர்முத்துமாரி துவக்கி வைத்தார் மேலும் கிளையில் தானியங்கி பணம் பெறும் இயந்திரத்தை எம்.கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பொறியாளர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஸ்ரீராம்மற்றும் அருகில் உள்ள கிளை நிர்வாகிகளும் பெரும் திரளான ஊழியர்களும் பொதுமக்களும் திரளாக இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை புதிய வங்கி கிளை மேலாளர் சீனிவாச ராவ் ரத்தோடு அனைவரையும் வரவேற்றார்.மேலும் இவ்விழாவில் வங்கி கடன் நகை அடகு கடன் விவசாய கடன் மற்றும் வீடு கட்டுவதற்கான கடன் என பல வகை திட்டங்கள் மக்களின் சேவையாக செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் நிருபர் H.பஷீர்
You must be logged in to post a comment.