திருச்சி DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய தியாகி.
திருச்சியில் ஒத்த கடை அருகே அமைந்துள்ள பிரபலமான DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் 76வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஷோரூம் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்விற்கு D J ஆட்டோமொபைல் ஷோரூமின் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான DJ வெங்கடேஷ் துரை தலைமை வகித்தார்.
DJ ஷோரூமின் HR மேலாளர் விஜய் முன்னிலையில் தேசிய கொடியை சுதந்திர போராட்ட தியாகியும் DJ ஷோரூம் மேலாளருமான பாலசுந்தரம் கொடியேற்றினார். பின்னர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக கண்டோன்மென்ட் பறவைகள் சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பழம் பெருமை வாய்ந்த இரு சக்கர வாகன கண்காட்சியை பொதுமக்கள் பார்த்து செல்ல அமைந்துள்ள பகுதியில் DJ ஆட்டோமொபைல் மேலாளர் பாலசுந்தரம் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்வில் DJ ஆட்டோமொபைல் ஷோரூம் சார்பில் பழம்பெரும் இரு சக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது பொதுமக்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடதக்கது. திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.