தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் கொடியேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
76வது குடியரசுத் தின விழா இன்றைய தினம் சென்னையில் திருவல்லிக்கேணி அருகே காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். மேலும், சாரண – சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள அனைவரோடும் சேர்ந்து குழுப்படம் எடுத்துக் கொண்டார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.