புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இணையதளம் வழியாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி ரோட்டராக்ட் கிளப் மற்றும் வேதாதி மகரிஷி ஸ்கை யோகா – WBSC திருச்சி மண்டலத்துடன் இணைந்து ‘வீட்டில் யோகா பற்றி இணையதளம் வழியாக 21.06.2020 அன்று காலை 8.00 மணி முதல் காலை 9.10 மணி வரை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ரோட்டராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர்.A.R. பொன் பெரியசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரியின் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் செயலாளர் திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களின் வாழ்த்துரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களை முனைவர் எம்.ரமேஷ் அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல WCSC தலைவர், சீனியர் பேராசிரியர் மாலா ஜெயபிரகாஷ் மற்றும் திருச்சி மண்டல WCSC உதவி இயக்குனர் சீனியர் பேராசிரியர் ஜெயபிரகாஷ் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமை குறித்து சிறப்பு உரைரையாற்றினார். ஸ்மார்ட் திருச்சி மண்டலத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் கே.ராஜேந்திரன் யோகா செயல்முறை விளக்கமளித்தார். யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும்.

பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் 36 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக ரோட்டராக்ட் கிளப் தலைவி மாணவி செல்வி ஆர்.ஷோனா நன்றியுரையாற்றினார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!