புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு  நடைபெற்றது.இஸ்ரோ ஓய்வு பெற்ற ஜூனியர் விஞ்ஞானி M.பாலசண்முகம் பங்குபெற்று ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினார்.பூமி எவ்வாறு சுழல்கிறது, பூமி வளிமண்டல செயல்பாடு, ராக்கெட் வகைகள் (ரோஹிணி, SLV, PSLV, GSLV, GSLV MKIII) மற்றும் செயற்கைக்கோள் வகைகள் குறித்து விரிவாக எதுத்து கூறினார். கடந்த ஐம்பது ஆண்டுகால இஸ்ரோ வளர்ச்சி குறித்து விளக்கமாக எடுத்துஉரைத்தார். ககன்யான் விண்வெளி திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து விளக்கினார்.சதிஷ்தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா குறித்த கட்சி படம் காண்பிக்கப்பட்டது.

கல்லூரியில் உள்ள PSLV, GSLV, GSLV MKIII ராக்கெட் மாதிரிகள் செயல்படும்விதம் குறித்து விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.இருநூறுக்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் இளம்கலை இயற்பியல் துறை மாணவர்கள் பங்குபெற்றனர்.முன்னதாக கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இயற்பியல் துறை பேராசியார் குமரவேல் வரவேற்பு உரையாற்றினர். பேராசியார் இரமேஷ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

செய்தி : .இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!