இன்று, டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். ஆனால், சூரிய கிரகணம் தெரியும் அளவு மற்றும் தெளிவு ஊருக்கு ஊர் மாறுபடலாம்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன? (Solar Eclipse Meaning)
சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.குவியக் கூடிய நேரம், அதாவது சூரியன் – சந்திரன் – பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் குவியக் கூடிய நிகழ்வாக நடக்கின்றது. இதனால் நாம் எதை செய்தாலும் அதற்கான பலன்கள் மிக அதிகமாக கிடைக்கும். இதன் காரணமாக தான் வீட்டில் இருந்த படியே இறை வழிபாடு செய்வதும், மந்திரங்களை ஜெபிப்பதும் நல்லது என கூறுகின்றனர்.
கிரகணம் ஏற்படக் கூடிய நேரம்:
நாமக்கல்ல கடந்த பத்தாண்டுகளைக் கணக்கிட்டால், இதன் கடைசி சூரிய கிரகணம் இன்று தென்னிந்தியாவில் நிகழ்கிறது. கிரகணத்தின் போது, சூரியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ‘நெருப்பு வளையமாக’ தோன்றும் என்பது இதிலுள்ள மற்றொரு அதிசயம். இந்த சூரிய கிரகணம் சரியாக இன்று காலை 8.08am மணியில் இருந்து தொடங்குகியது. காலை 11:19 மணியளவில் கிரகணம் நிறைவடைந்தது. இந்த இடைவெளிக்குள் சரியாக 9.30 மணியளவில் சூரியன் ‘நெருப்பு வளையமாக’ காட்சி தந்தது.
செய்தி -இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









