இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்புக்காக “யாதும் உயிரே” என்ற முன்னெடுப்பின் மூலம் அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் உள்ள குழந்தைகளை மரக்கன்று நட்டு புத்தாண்டை துவங்க வைத்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு, அரசு சாரா குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒவ்வொரு இல்ல வளாகத்திற்குள், தலா 10 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டு, மரக்கன்றுகளை சுற்றி மரக்கன்று வேலி அமைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர் அப்துல் ரஹ்மான், வனவர் நசீருதீன், குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகள், குழந்தைகள் கலந்து கொண்டனர் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.