இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தேசிய பேரியக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று (31/12/18) காலை 10:15 மணியளவில் நடுத்தெரு ஜம்ஆ பள்ளி அருகில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுர மாவட்ட செயலாளர் முகம்மது நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கீழக்கரை நகர் தலைவர் காதர் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPI கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் கீழை அஸ்ரப் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கேம்பஸ் ஃப்ரண்ட் பற்றியும் மற்றும் அது நாடு முழுவதும் மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் செயல்பட்டு வருவது பற்றியும், மரம் நடுவதில் உள்ள நன்மைகள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை முகையித்தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் Dr.N.M.சேகு ஷஹூபான் சார் பாதுஷா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் Dr.A.அலாவுதீன், நுகர்வோர் பாது காப்பு கழகம் நகர் செயலாளர் இப்ராஹிம், சாலை வெல்பர் டிரஸ்ட் செயலாளர் சீனி ஆகியோர் வருகை தந்தனர் கேம்பஸ் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்ட இணைச்செயலாளர் முகமது சுகைல் அவர்கள் நன்றியுரை வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியை கீழக்கரை நகர் SDPI கட்சியின் செயல்வீரர் சுபைர் ஆப்தீன் தொகுத்து வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மரக்கன்று நட்டு வைத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினால் பராமரிக்கப்படும் என்ற வாசகம் அமைந்த வேலியையும் அமைத்தனர். பின்னர் கீழக்கரை முழுவதும் முதல் கட்டமாக 25 மரக்கன்றுகள் நட்டுவைத்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா கீழக்கரை நகர் சார்பாக பராமரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடுத் தெரு ஜும்மா பள்ளி அருகிலும் , PEE YES YEM (பத்து ரூபாய்) மருத்துவமனை அருகிலும் தற்போது அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்வு பற்றி கீழக்கரையை சார்ந்த உசேன் என்பவர் கூறுகையில், இது மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்ட கூடிய விசயமாகும், ஆனால் மரம் நடுவதுடன் நிறுத்தி விடாமல், உறுதி கொண்டது போல் முறையாக பராமாரிக்கவும் வேண்டும், ஏனென்றால் முன்னர் இது போல் வைத்த கன்றுகள் மரங்களாக வளர்ந்து சில கட்டிடங்களில் உள் வரை சென்றுள்ளது, அதை வெட்டவும் முடியாமல் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்’ என்றார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












