உசிலம்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள அ.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பசுக்காரன்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ள பந்தாணி கண்மாய் கரையை சுற்றி இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண்ணன்.துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் தலைமையில் பழங்கள் தரும் நாவல் மரக்கன்றுகள் பெரு நெல்லி,மா, வேம்பு,தான்றிக்காய் மற்றும் புளியமரக்கன்றுகள் என 250 மரக்கன்றுகளை தானமாக வழங்கி மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கிவைத்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் மற்றும் புலவர் சின்னன் ஐயா முன்னிலையில் 100நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒரு திருவிழாவைப்போல மரக்கன்றுகள் நட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் மற்றும் உசிலம்பட்டி வளர்ச்சி மையம் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் தொடர்ந்து உசிலம்பட்டி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகளையும் பாராட்டுக்களையும் வழங்கியதோடு கண்மாய்கள் தூர்வாருதல் மற்றும் சீரமைப்பு போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு பெரிதும் காரணமாக இருந்துவரும் அருண்பரத்க்கும் பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர் செல்வக்குமார் மற்றும் தேவர்தினேஷ் ஆகியோர் கிராமத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!