கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது..

கீழக்கரை சேர்மன் சதக் சாலை அபுபக்கர் சித்தீக் பள்ளி அருகில் சில ஆண்டுகளாக பட்ட நிலையில் ஒரு மரம் விழும் தருவாயில் காணப்பட்டு வந்தது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறார்களுக்கு, அம்மரத்தையொட்டி  உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றதால், உயிருக்கு அச்சம் ஊட்டும் விதமாக இருந்து வந்தது. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன் நாளிதழில்கள், கீழக்கரை டைம்ஸ் இணைய தள பக்கத்திலும் செய்தியாக வெளி வந்தது.

இதன் எதிரொலியாக இது சம்பந்தமாக கடந்த 10ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக இந்த மரத்தை அகற்ற மனுவும் அளிக்கப்பட்டது. கழகத்தின் இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது கூறுகையில், “எங்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இன்றைய தினம் இந்த பட்டுப் போன மரம் கீழக்கரை வட்டாச்சியர் ஏற்பாட்டில் கீழக்கரை நிர்வாக அதிகாரி தமிழ் செல்வன், கிராம உதவியாளர் சந்திர சேகர் முன்னிலையில் அகற்றப்பட்டது. இந்த சமூக முயற்சியில் மக்கள் டீம் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் ஹாஜியார் என்ற அப்துல் காதர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.  அதே சமயம் மக்கள் நல பாதுகாப்பு கழகத்துடன், கீழை நியூஸ் நிர்வாகமும் இணைந்து பட்டு போன அதே இடத்திலும் இன்னும் பல இடங்களிலும் மரங்கள் நட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!