கீழக்கரையில் ஆணி வேரோடு சாய்ந்து விழுந்த பழமை வாய்ந்த ஆலமரம்……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சனாகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள எம்.எம்.கே பெட்ரோல் பங்க் எதிரில் ரஞ்சித் பஞ்சர் கடை அருகில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கீழக்கரை கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்த நசுருதீன் மகன் பதுரூஸ் வயது 18 அவர் இரு சக்கர வாகன கடையில் வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்ய வந்தவருக்கு தலையில் மரம் விழுந்து லேசான காயமும், இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் இன்று (02/01/2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்பகுதியில் வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மாலை வர இருப்பதால் மரத்தை அகற்ற அனைத்து அரசு துறை வருவாய்த்துறை நகராட்சி துறை காவல்துறை தீயணைப்பு மட்டும் மீட்புப்படை மின்சாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு படியுங்கள் கீழை நியூஸ். SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!