திண்டுக்கல் ஆத்தூர் வட்டம் ஆத்தூர்பிரிவு கோழிப்பண்ணை அருகே அழகாய் பூத்துக்குழுங்கும் மரங்கள் சாலையோரம் கடந்துசெல்லும் பயணிகளுக்கு நிழல் தரக்கூடிய வல்லமை பெற்றுவிளங்கும் அந்த சாலையோர மரங்களை சிறிதளவும் தயக்கமே இன்றி அகற்றும் வேலை மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதைப்பற்றி அவர்களிடம் பொதுமக்கள் கேட்கையில் நாங்கள் வேண்டுமென்றே வெட்டவில்லை நெடுஞ்சாலையில் ஏற்படுகின்ற விபந்தைதடுக்கவும் சாலையோரம் மரங்களில் வாகன ஓட்டிகள் மோதி ஏற்படுகின்ற விபத்துக்களை தடுக்கவும், சாலையோரம், நடைபயணிகள் கடக்கும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு இடைவிட இயலாது இடையூராக இருக்கும் மரத்தை அகற்றுகிறோம். இந்த அகற்றும் பணியை தனியார் ஒருவருக்கு தாங்கள் ஏலம் விட்டதாகவும் கூறினார்கள்.
இதற்கிடையில் பொதுமக்கள் தங்களாகவே முன்வந்து சில கேள்விகளை முன்வைத்தனர் அவற்றில்..
(1) பல ஆண்டுகாலம் இந்தமரங்கள் இங்கேதான் உள்ளது அப்போது ஏற்படாத விபத்து இப்போதா ஏற்படப்போகுதா? (2)இந்த வழியே நடந்து செல்லும் நடைபயணிகள் சூரியனின் வெப்பத்தை தாங்க இயலாமல் சற்று மரத்தின் நிளலடியில் தங்கிச்செல்வர் அது பிடிக்க வில்லையா? (3) இந்த சலையில் இருந்து சுமார் 100அடியில் அரசு மதுபானக்கடை உள்ளது அங்கு குடித்துவிட்டு வாகனத்தை ஓட்ட இயலாமல் நிலை தடுமாறி சாலையில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த மரங்கள்தான் பொறுப்பா? முதலில் அந்த மதுக்கடையை மூடுங்கள் பிறகு எப்படி விபத்து ஏற்படுகின்றது என பார்ப்போம்?
மேலும் இதுபோன்ற பல கேள்விகளை முன்வைத்தனர் ஆனால் பதில் அளிக்க இயலாமல் வாயடைத்து நின்றதுடன் இதற்கு முழுக்காரணம் நெடுஞ் சாலைத்துறை அலுவலர் ஜோதிபாஸு(ஏ,இ)தான் காரணம் நீங்கள் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் மேலும் மரத்தை வெட்ட தங்களிடம் அனுமதி ரசீது உள்ளது என ஒரு படிவத்தை காண்பித்தனர்.
தமிழகமே தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் வேலையில், மழை தரும் மரங்களை வெட்டுவது மிகவும் வேதனையான விசயம். இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை முறையாக கவனித்து செயல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர்:- அழகர்சாமி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









