கீழக்கரை முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC”..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (01/01/2021) மாலை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC” என்ற நிறுவனம் கீழக்கரையைச் சார்ந்த SKV.ஷேக் என்பவரால் தொடங்கப்பட்டது.

இவர் கடந்த பல வருடங்களாக சேவை நோக்கில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரும் வகையில் உலகில் உள்ள பல் வேறு நிறுவனங்களின் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை பிரத்யேக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பகிர்ந்து வந்தார்.  பின்னர் அதை தொடர்ந்து கீழக்கரையில் வெளிநாடு பயணம் செல்பவர்களுக்கு உதவும் வண்ணம் விசா மற்றும் டிக்கெட் வியாபார நிறுவனத்தை தொடங்கினார்.  இவரின் பொது நல சேவையை கௌரவிக்கும் விதமாக பல் வேறு சாதனை விருதுகளும், பாராட்டு பத்திரங்களும் பெற்று இருப்பது குறிப்பிடதக்கது.

இன்று (01/0/2021) ஐக்கிய அரபு அமீரகத்தில் “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC” தொடங்கியிருப்பது, அவருடைய பயணத்தில் ஒரு மைல் கல் ஆகும்.  இந்த திறப்பு விழா நிகழ்வில் பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!