இராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் ஆட்சியர் வீரராக ராவ் உத்தரவு..

இராமநாதபுரம் ஆட்சியர் மாவட்டத்தில் வட்டாட்சியர் பணியிட மாறுதல் உத்தரவை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டாட்சியர் பொன்.கார்த்திகேயன் இராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியராகவும், இராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலர் கே.எம்.தமீம் ராசா ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் ஆகவும், கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ஹரி சதீஷ்குமார் இராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலராகவும், முதுகுளத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பெ.சேகர் திருவாடனை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாடானை வட்டாட்சியர் மா.சாந்தி உப்பூர் அனல் மின் நிலைய அலகு – 2 நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், இராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலைய நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ். சபீதாள் பேகம் பரமக்குடி நத்தம் நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும், பரமக்குடி நத்தம் நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அ.கா.சிக்கந்தர் பபிதா கமுதி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வு குழு அலுவலர் சீ.சுரேஷ்குமார் இராமநாதபுரம் பேரிடர் மேலாண் தனி வட்டாட்சியராகவும், இராமநாதபுரம் பேரிடர் மேலாண் தனி வட்டாட்சியர் என்.சரவணன் கீழக்கரை வட்டாட்சியராகவும், கீழக்கரை வட்டாட்சியர் ச.ராஜேஸ்வரி முதுகுளத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!