தென்காசி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் தனிப்பிரிவு போலீசார் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவின் படி செங்கோட்டை காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ்காரர் திருமலை இலத்தூர் காவல் நிலையத்திற்கும், இலத்தூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆய்க்குடி காவல் நிலையத்திற்கும், சுரண்டை ஏட்டு ரவிக்குமார் குற்றாலம் காவல் நிலையத்திற்கும் , வாசுதேவநல்லூர் ஏட்டு வேலுச்சாமி கடையநல்லூர் காவல் நிலையத்திற்கும், புளியங்குடி போலீஸ்காரர் தட்சிணாமூர்த்தி திருவேங்கடம் காவல் நிலையத்திற்கும், தென்காசி முத்துப்பாண்டியன் இலத்தூர் காவல் நிலையத்திற்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயபாலகிருஷ்ணன் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கும், ஆலங்குளம் ஏட்டு நவக்குமார் அதே காவல் நிலையத்தில் தனிப் பிரிவிற்கும், சிவகிரி ஜெயராஜ் புளியங்குடி காவல் நிலையத்திற்கும், புளியங்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரபாண்டியன் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கும், இலத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் செந்தில் ரமேஷ் செங்கோட்டை காவல் நிலையத்திற்கும், புளியரை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தென்காசி காவல் நிலையத்திற்கும், சுரண்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை சுரண்டை தனிப்பிரிவுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.