தூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. இதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் பிறப்பித்து உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும், தூத்துக்குடியில் பிற பகுதிகளுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்துக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூடு நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்துக்கும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நெல்லை மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் கோவில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி நெல்லை மாவட்டம் பனவடலிசந்திரம் காவல் நிலையத்துக்கும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தூத்துக்குடி மத்திய பாகத்துக்கும், திருச்செந்தூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆத்தூர் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மது ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி பசுவந்தனை இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்துக்கும், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகதேவி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கும், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கள்மங்களம் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









